Wednesday, December 17, 2025

அழகில் மயங்கிய மணமகன்…வருங்கால மாமியாருடன் தப்பி ஓட்டம்

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு வரன் தேடி வந்தார். அவரது மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

மணமகளை விட அவரது தாய் அழகாக இருந்ததால் அதில் மயங்கிய மணமகன் தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் அடிக்கடி நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்தனர். இது காதலாக மாறியது.

தனது மகளின் திருமணத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு மணமகனுடன் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News