Friday, December 27, 2024

மணப்பெண்ணைப் பார்த்ததும் மயங்கி விழுந்த மணமகன்

திருமணத்தன்று மணப்பெண்ணைப் பார்த்த மணமகன்
மயங்கி விழுவதுபோன்ற வேடிக்கையான வீடியோ சமூக
வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது,

வட இந்தியாவில் திருமணம் நடப்பதற்கு சில விநாடிகளுக்குமுன்பு
மணமகனும் மணமகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இருவரும்
அவர்களின் பாரம்பரியத் திருமண உடையில் இருக்கின்றனர்.

மணமகன் தலைப்பாகை அணிந்து இளவரசன்போலும்
மணமகள் இளவரசிபோலும் அலங்காரமாக உடையணிந்துள்ளனர்.
அப்போது நேரில் மணமகளின் அழகைப் பார்க்கும் மணமகன்
அவளின் அழகில் லயித்து மயங்கிச் சரிவதுபோல நடிக்கிறார்.
அவரைத் தாங்கிப் பிடித்துக்கொள்கிறார் நண்பர்.

சில நிமிடங்களில் கணவராகப்போகும் மணமகன் தன் அழகைப்
பார்த்து மயங்கி விழுவதுபோல நடிப்பதைப் பார்த்து நாணத்துடன்
முகத்தைத் திருப்பிக்கொள்கிறார் மணமகள்….

ஓ….இதுதான் அழகுல மயங்குறதா…..மாப்பிள்ளைய வச்சு
காமெடி கீமெடி பண்ணலியே….

Latest news