Monday, July 14, 2025

‘பெரிய சாத்தான்’ அமெரிக்காவுக்கு வில்லன்.. ரஷ்யாவை பின்னிருந்து ‘இயக்கும்’ ஈரான்?

அமேரிக்காவிற்கு எதிராக ஈரான் பல்வேறு திட்டங்களை கையில் எடுத்து, உலக அரங்கினை வெகுவாக அதிர வைத்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா இடையில் புகுந்து, பயங்கர பெர்பாமென்ஸை போட்டதற்கு ஈரான் – அமெரிக்கா இடையிலான 46 வருட பகையே முக்கிய காரணமாகும். 1979ம் ஆண்டு முதல் ஈரானை யார் ஆட்சி செய்தாலும் அவர்களை அமெரிக்கா விரோதியாக தான் பார்க்கிறது.

எனவே ஈரான் -அமெரிக்கா இரு நாடுகளும் பல வருடங்களாக கீரியும், பாம்பும் போல தான் இருக்கின்றன. இதனால் தான் தங்களை டார்ச்சர் செய்யும் அமெரிக்காவை, ஈரான் ‘பெரிய சாத்தான்’ என்று பெயர் சூட்டி அழைக்கிறது.

இதற்கிடையே ரஷ்யா – உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு வழிகளை கையில் எடுத்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஒத்து வரவில்லை என்றால், அந்நாட்டின் மீதி பொருளாதார தடைகள் விதிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் தங்களின் உள்நாட்டு தயாரிப்பான ஷாஹெட் டிரோன்களை, ரஷ்யாவிற்கு வழங்கி ஈரான் உதவி செய்துள்ளது. இந்தவகை ட்ரோன்கள் துல்லிய தாக்குதலுக்கு பெயர் பெற்றவை என்பதால், ரஷ்யா இந்த டிரோன்களை வைத்து தற்போது உக்ரைனை வெகுவாகத் தாக்கி வருகிறது. இதன்மூலம் ஈரான் நாட்டு ராணுவ தளவாடங்கள் எந்த நாட்டுக்கும் சளைத்தவை அல்ல என்பது தெளிவாகி இருக்கிறது.

ஈரானின் இந்த செயல் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல’, அமெரிக்காவின் கோபத்தை வெகுவாக தூண்டி விட்டுள்ளது. இதையடுத்து உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கி உதவி செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதற்கு ரஷ்யாவின் பதிலடி எப்படி இருக்கப் போகிறது? என்பது தெரியவில்லை.

ஈரான் உயர் அதிகாரி காசிம் சுலைமானியின் மரணம் மற்றும் இஸ்ரேலுக்கு உதவி செய்தது ஆகிய காரணங்களால், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலைவெறியில் இருக்கிறது. இதனால் டிரம்பை கொலை செய்ய ‘ரத்த ஒப்பந்தம்’ என்னும் பெயரில் ஈரான் மக்கள் நிதி திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news