Thursday, April 17, 2025

உலக பொருளாதாரத்தின் ஆணி வேர் அசைகிறது! ‘தங்கத்தை வாங்கி போடுங்க!’ பறந்து வந்த அதிரடி வார்னிங்!

கொஞ்ச நாட்களாகவே TV, YouTube channel, சமூக வலைதளங்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும், இனி வரும் நாட்களில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா, தங்கத்தை வாங்கலாமா இல்ல காத்திருக்கலாமா என்பது அனல்பறக்கும் பேசுபொருளாகி மக்களை சற்றே பதற்றத்துக்குள்ளாக்குகிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தங்கம் விலை தொடர்பாக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், Rich Dad, Poor Dad புத்தகத்தின் ஆசிரியருமான Robert Kiyosaki பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அவருடைய பதிவு ஒன்றில் “தயவு செய்து தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்றவற்றை வாங்குங்கள். நான் சொல்வதை கேளுங்கள். தங்கம் விலை எப்போதும் இல்லாத மிகப்பெரிய உயர்வை அடைந்துள்ளது. இனியும் தொடர்ந்து விலை கூடவே செய்யும் என்பதோடு வெள்ளிக்கான தேவையும் அதிகரிக்கிறது, மேலும் பிட்காயின் மதிப்பு உயருகிறது.

நாம் எதை நினைத்து பயந்தோமோ அந்த மோசமான பொருளாதாரம் வந்துவிட்டது. பொருளாதார மந்தநிலை வந்துவிட்டதால் நிலைமை மோசமாகி பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. தயவு செய்து தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் ஆகியவற்றைக் வாங்குங்கள், என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உலகளவிலான வர்த்தக தளம் மிக மோசமாக இருப்பதால் கடந்த 100 வருடங்களில் இல்லாத மிக கொடுமையான நிகழ்வுகள் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று உலக அளவில் பிரபலமான பொருளாதார நிபுணரான Robert Kiyosaki கூறியிருப்பதோடு உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.

உலக வரலாற்றில் ஏற்பட்ட மிகக்கொடுமையான பொருளாதார சரிவு “The Great Depression” என்று அழைக்கப்படுகிறது. இப்போது அதே போன்ற பயங்கரமான சம்பவம் நடக்க போகிறது என்று ராபர்ட் கியோசாகி warning கொடுத்திருப்பது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆட்டம் காணும்; தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் விரைவில் நடக்கும் என கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீடாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news