Tuesday, December 3, 2024

தொடர்ந்து 10 ஆண்டுகளாகத் தூங்கிய சிறுமி

தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரு சிறுமி தூங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி எலன் ஸேட்லர். 12 குழந்தைகளைக்கொண்ட மிகப்பெரிய
குடும்பத்தில் பிறந்த இந்தச் சிறுமியின் தந்தை ஒரு விவசாயி. தாய் இளம்வயதிலேயே விபத்தில்
பலியாகிவிட்டதால், எலனின் தந்தை மறுமணம் செய்துகொண்டார்.

சிறுமியின் குடும்பம் டோர்வெல் என்ற கிராமத்தில் வசித்துவந்தது. இந்தக் கிராமம் ஆக்ஸ்போர்டு
மற்றும் பக்கிங்ஹாம்ஷயர் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அமைந்திருந்தது.

1859 ஆம் ஆண்டு, மே மாதம் 15 ஆம் தேதி பிறந்த எலன் ஸேட்லருக்கு 1871 ஆம் ஆண்டுவரை எந்தப்
பிரச்சினையுமில்லை. அதே ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி வழக்கம்போல் தூங்கினார். அடுத்த நாள்
காலையில் குடும்பத்தினர் அனைவரும் எழுந்தனர். ஆனால், ஆலன் எழுந்திருக்கவில்லை. தாயும்
தந்தையும் சகோதர சகோதரிகளும் அவளை எழுப்ப முயன்றும் எந்தப் பலனும் இல்லை. அவர்
இறந்துவிடுவார் என்று குடும்பத்தினர் கருதினர். ஆனால், எலனுக்கு நாடித்துடிப்பு இருப்பதை உணர்ந்து
உடனடியாக மருத்துவ வல்லுநர்களை வீட்டுக்கு வரவழைத்தனர்.

அவர்கள் எலன் ஸேட்லரைப் பரிசோதித்தபோது, தூக்கத்திலிருந்து எழுப்ப மூளைக்குத் தேவையான
ஒரேக்ஸின் என்னும் வேதிப்பொருள் உருவாகாமல் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன்காரணமாக
சிறுமி உறக்கத்திலிருந்து எழும்பாமல் இருப்பதைத் தெரிவித்தனர். டிரைபானோசோமியாசிஸ் என்னும்
உறக்க வியாதியில் சிறுமி சிக்குண்டு இருப்பதையும், அதிலிருந்து மீட்டுக்கொண்டுவர எந்த மருத்துவ
வழியும் இல்லை என்பதை அறிந்து கவலையில் ஆழ்ந்தனர்.

இதனால், செய்வதறியாமல் மருத்துவ வல்லுநர்களும், சிறுமியின் குடும்பத்தினரும் திகைத்தனர். இந்த
நிலையில், தொடர்ந்து எலன் உறங்கிக்கொண்டே இருந்தாள். காலச்சக்கரம் உருண்டோடியது.

1880 அம் ஆண்டு, தனது 21 ஆவது வயதில் கண் விழித்தார் எலன். பல்லாண்டு உறக்கத்திலிருந்து எழுந்த
அவரைக் குடும்பத்தினர் ஆச்சரியத்தோடும் ஆனந்தத்தோடும் அரவணைத்தனர். ,இந்த அதிசயத்தைக்
காண அவரது தாய் உயிருடன் இல்லை. எலனைப் பெற்றெடுத்த தாய் 5 மாதங்களுக்கு முன்பே மாரடைப்பால்
நிரந்தரமாகக் கண்மூடிவிட்டார்.

இதன்பிறகு எலன் ஒரு விவசாயியைத் திருமணம் செய்து 6 குழந்தைகளுக்குத் தாயும் ஆகிவிட்டார். 1901 ஆம்
ஆண்டு எலன் ஸேட்லரும் காலமாகிவிட்டார். அவரது குழந்தைகளில் ஒருவர் இந்தத் தகவலைப் பகிர்ந்து
கொள்ள, 12 வயதில் தூங்கி 21 வயதில் எழுந்த எலன் தற்போது வலைத்தளங்களின் நினைவலைகளில்
உயிருடன் உள்ளார்

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!