கிரிக்கெட் போட்டிக்குள் புகுந்த பேய்

280
Advertisement

ஜிம்பாப்வே, வங்காள தேச அணிகளுக்கிடையே நடைபெற்ற
கிரிக்கெட் போட்டியின்போது பேய் புகுந்துவிட்டதாக வீடியோ ஒன்று
சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஜிம்பாப்வேவுக்கும் வங்காள தேசத்துக்கும் இடையே டி20 கிரிக்கெட்
போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்தது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டி
2021 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் 25 ஆம் தேதி நடந்தது.

அப்போது வங்க தேச அணி பேட்டிங் செய்தது. 18 ஆவது ஓவரின்போது
முகமது சைபுதீன் பேட்டிங் செய்தார். டென்சாய் சாதரா என்ற வீரர்
பந்து வீசினார்.

5 ஆவது பந்தை அடித்து விளாசினார் சைபுதீன். அப்போது திடீரென்று
ஸ்டெம்பின்மீது இருந்த BAILS தானாகவே கீழே விழுந்தது ஆச்சரியத்தையும்
அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது-

காரணம், பேட்ஸ்மேன் சைபுதீன் ஸ்டம்பிலிருந்து சற்றுத் தள்ளியே நிற்கிறார்.
பேட்டைக்கொண்டு ஸ்டம்பைத் தட்டவும் இல்லை; பந்தும் ஸ்டம்ப் பக்கம்கூட
எட்டிப் பார்க்கவில்லை. ஆனால், ஏதோ ஒன்று கீழே விழும் சத்தம் கேட்டது.

சட்டென்று திரும்பிப் பார்த்தார் சைபுதீன். நடுவர்களும் திரும்பிப் பார்த்தனர்.
யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. ஒரு கணம் திகைத்து நின்றனர்.
மூன்றாவது அம்பயர் பார்த்தபோதுதான் தானாகவே பைல்ஸ் கீழே விழுவது
தெரிய வந்தது. உடனே மூன்றாவது நடுவர் சைபுதீன் நாட் அவுட் என்று கூறிவிட்டார்.

இதைப் பார்த்த ரசிகர்களும் வலைத்தளவாசிகளும் பேய் வந்து சைபுதீனை
அவுட் ஆக்கிவிட்டதாகக் கூறி பரபரப்பைப் பற்றவைத்துவிட்டனர்.