திருவண்ணாமலை அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து, மரத்தில் ஏறி கிளைக்கு, கிளை தாவிய விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கிழ்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவர், குளத்துதெருவில் உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்துள்ளார்.
ஊராட்சி மன்றத்திற்கும், ஆட்சியர் அலுவலகத்திற்கும் பலமுறை சென்று, சாலையை சரி செய்ய முறையிட்டுள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர், சாலை வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து, அங்குள்ள மரத்தில் ஏறி கிளைக்கு, கிளை தாவி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, 4 மணிநேரம் கழித்து அவர் இறங்கினார்.