சென்னை, பல்லாவரம் அருகே, முறைகேடாக குடிநீர் குழாய் அமைத்த குடும்பத்தினரை தட்டி கேட்ட கண்டோன்மென்ட் பணியாளர்களை,கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரிசூலம், அருமணைச்சாவடி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரது வீட்டில், அனுமதியின்றி குடிநீர் குழாய் அமைத்திருந்த நிலையில்,கண்டோன்மென்ட் ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்த வருகை தந்தனர்.
அப்போது, ஜெயகுமாரியின் மகன்களான ஜெயபால், 28, பார்த்திபன், 26, ஜெயக்குமார், 23, ஆகியோர் கண்டோன்மென்ட் பணியாளர்களை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கண்டோண்ட்மெனட் பணியாளர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக பொறியாளர் சதீஷ்குமார் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். தகவலின் ஆடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வருவதை அறிந்த ஜெயகுமாரியின் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி சென்றனர்
இந்த நிலையில், காயமடைந்த பணியாளர்களை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஜெயகுமாரியின் மகன்கள் மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
