மனிதர்களைப்போல 2 குரங்குகள் அரவணைத்து மகிழும் காட்சி
மனிதர்களின் மனங்களை வென்றுள்ளது.
நெருங்கிய உறவினர்கள் நீண்டகாலத்துக்குப் பிறகு சந்தித்துக்
கொள்ளும்போது எப்படி ஆரத்தழுவி மகிழ்வார்களோ அப்படியே
2 குரங்குகளும் ஆரத்தழுவி மகிழ்ந்த சம்பவம் அனைவரையும்
கவர்ந்துவருகிறது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில்
பகிரப்பட்டு வைரலாகத் தொடங்கியுள்ளது.
ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோக் காட்சியில் 2 வளர்ந்த
குரங்குகள் ஒவ்வொன்றும் ஒரு குழந்தையை சுமந்துகொண்டு
ஒன்றையொன்று நோக்கி வருகின்றன. அருகில் வந்ததும் ஒன்றையொன்று
தழுவிப் பாசத்தை வெளிப்படுத்துகின்றன.
அப்போது குரங்கு வைத்துள்ள குழந்தையைத் தன் தோளுக்கு
மாற்றி அதனைப் பாசத்தோடு அரவணைத்து மகிழ்கிறது எதிரே வந்த குரங்கு.
இந்தக் காட்சிகள் அப்படியே மனிதர்களின் குணாதிசயங்களை நினைவூட்டுவதாக
அமைந்துள்ளது.. குரங்குகளிடமிருந்துதான் மனிதன் இத்தகைய குணங்களைப்
பெற்றான் என்று வலைத்தளவாசிகள் பதிவிட்டு மகிழ்ந்துவருகின்றனர்.