Thursday, July 31, 2025

வல்லரசு சீனாவின் வீழ்ச்சி தொடங்கியது! நாட்டை அழிக்கப் போகும் ஒற்றைத் தவறு!

குழந்தை பெற்றால் உடனே 50,000 ரூபாய்! இது ஏதோ தீபாவளி ஆஃபர் அல்ல… இது உலகின் வல்லரசு நாடான சீனா, தன் நாட்டு மக்களுக்குக் கொடுக்கும் ஒரு ஜாக்பாட் ஆஃபர்!

ஒரு காலத்தில், “ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை” என்று சட்டம் போட்ட அதே சீனாதான், இன்று, “தயவுசெஞ்சு குழந்தை பெத்துக்கோங்க, நாங்க பணம் தர்றோம்” என்று கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறது.

சீனாவுக்கு ஏன் இந்தத் திண்டாட்டம்? இதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!

சீனாவின் மக்கள்தொகை, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமையை, அது இந்தியாவிடம் இழந்துவிட்டது. ஐ.நா. சபை என்ன சொல்கிறது தெரியுமா? இதே நிலை நீடித்தால், 2100-ல் சீனாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறது.

இந்த வீழ்ச்சியைத் தடுக்க, சீன அரசு ஒரு புதிய, நாடு தழுவிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும், ஆண்டுக்கு 500$ டாலர், அதாவது சுமார் 43570 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

ஏன் இந்த நிலைமை?

பல ஆண்டுகளாக அமலில் இருந்த சீனாவின் “ஒரே குழந்தை கொள்கை” ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இப்போது, குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதால், பல இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதையே தவிர்க்கிறார்கள்.

இந்த தேசிய மானியம் மட்டுமல்ல… பல உள்ளூர் அரசாங்கங்கள் இன்னும் பெரிய ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன.

உதாரணமாக, ஹோஹோட் என்ற நகரத்தில், மூன்றாவது குழந்தையைப் பெற்றால், 1 லட்சம் யுவான், அதாவது கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய்க்கு மேல் மானியம் கொடுக்கிறார்கள். ஹாங்க்சோ நகரத்தில், மூன்றாவது குழந்தைக்கு ஒரே தடவையாக 25,000 யுவான் வழங்கப்படுகிறது.

ஆனால், ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்? என்றால், இந்த பணத்தால் மட்டும் சீனாவின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்கிறார்கள். இந்தத் தொகை ரொம்பவும் குறைவு. ஆனால், இது ஒரு முக்கியமான முதல் படி என்றும் கூறுகிறார்கள்.

ஏனென்றால், சீனாவின் மக்கள்தொகை குறைவது மட்டுமல்ல, அது வேகமாக வயதாகியும் வருகிறது. வேலை செய்ய இளைஞர்கள் இல்லாமல், ஓய்வூதியம் வாங்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சீனாவின் பொருளாதாரம் என்னவாகும்?

இறுதியாக, எல்லோருக்கும் எழும் கேள்வி இதுதான்.

பணம் கொடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்வது, ஒரு நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்குமா? இது தற்காலிக தீர்வா அல்லது நிரந்தரத் தீர்வா? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News