அமெரிக்கா – ஈரான் இடையே வெள்ளி கிழமை நடக்கப்போகும் சம்பவம்! உலகமே எதிர்பார்க்காத டிவிஸ்ட்!

உலகமே மூன்றாம் உலகப்போர் மூளுமோ என்று அச்சத்தில் உறைந்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்துள்ளது!

சமீப நாட்களாகவே ஒருவர் மீது ஒருவர் போர் மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த இந்த இரண்டு நாடுகளும், இப்போது ஒரே மேஜையில் அமர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இதுதான் இப்போதைய ஹாட் டாக் ஆஃப் தி வேர்ல்ட் நியூஸ்!

வரும் வெள்ளிக்கிழமை, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மிக நெருங்கிய சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் (Abbas Araqchi) நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.

இந்தத் திடீர் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் ‘அணு ஆயுத ஒப்பந்தத்தை’ (Nuclear Deal) எப்படியாவது இறுதி செய்வதுதான்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரானுடன் எப்படியாவது ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் போடுங்கள்.. அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக் கேளுங்கள்” என்று தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மிரட்டலை விட்டுவிட்டு, பிசினஸ் டீல் பேச அமெரிக்கா தயாராகிவிட்டது.

மறுபுறம் ஈரானும், “நாங்களும் நிபந்தனைகளை ஆராய்ந்து வருகிறோம், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார்” என்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் நிலவி வந்த போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

போர்க்கப்பல்களை அனுப்பி மிரட்டிக்கொண்டிருந்த அமெரிக்கா, இப்போது சமாதானப் புறாவைப் பறக்கவிட்டிருப்பது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இஸ்தான்புல்லில் நடக்கப்போகும் அந்தச் சந்திப்பில், கைகுலுக்கல் நடக்குமா? அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா? என்பதை உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது!

Related News

Latest News