தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் படி மின்வாரியம் 10 அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
அதன்படி, தேவையில்லாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்து விட வேண்டும் என்றும், மின் விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். மின்விசிறி, ஏசி, பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயன்பாடு இல்லாத மின்சாதனங்களை பிளக்-அவுட் செய்ய வேண்டும்.
குளிா்சாதனத்தின் பயன்பாட்டை முடிந்த வரை குறைக்க வேண்டும். அதனை உபயோகிக்கும் பட்சத்தில் 24 முதல்–26 டிகிரி செல்சியஸ் அளவிலேயே வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை அதிகம் சேமிக்கும் சாதனங்களை தோ்வு செய்து உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள மின்வாரியம், சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும், ஒரே அறையில் அதிக மின்சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மின் சிக்கனம் குறித்து குடும்பத்தினருக்கும் மாணவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மின்வாரியம் அறிவுறுததி உள்ளது.
