பணியிலிருந்து ஓய்வுபெற்றதைக் கொண்டாடிய டிரைவரின் வீடியோ அனைவரையும் ஈர்த்துவருகிறது.
பணியில் சேர்ந்தபோது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாரோ அந்தளவு பணியிலிருந்து ஓய்வுபெற்ற நாளிலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார் சிலி மெட்ரோ ஓட்டுநர் ஒருவர்.
அரசுப் பணியோ தனியார் பணியோ ஓய்வுபெறும் நாளில் பலர் சோர்ந்து போய்விடுவர். வருமானம் குறைந்துவிடுதல், குடும்பத்தினர் மத்தியில் மரியாதை குறைந்து விடுதல், பொழுதுபோகாதது போன்ற காரணங்கள்தான் இதற்கு முக்கியக் காரணங்கள்.
இவற்றுக்கு மாறாக, ஓய்வுபெறும் நாளிலும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்திருக்கிறார் அந்நாட்டின் சாண்டிகோ நகரில் மெட்ரோ ரயிலில் 44 ஆண்டுகள் டிரைவராகப் பணியாற்றிய காஸ்டுலோ அராயா.
சாண்டிகோ மெட்ரோ அமைப்பு 136 ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது. தினமும் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர். இந்த வழியாக இயக்கப்படும் ரயிலில் 1975 ஆம் ஆண்டுமுதல் பணியாற்றி வந்துள்ளார் அராயா.
ஓய்வுபெற்ற நாளில் ரயில் பயணிகள் அவரைக் கட்டிப் பிடித்து நன்றியுடன கைகுலுக்கினர். ரயில் பயணிகளின் வாழ்த்தில் மேலும் மகிழ்ந்துவிட்டார் அராயா.