விவசாயியாக மாறிய நாய்

154
Advertisement

இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் நாயின்
செயல் நெகிழவைத்துள்ளது.

வேளாண் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும்முன்,
வாய்க்காலை சீர் செய்வார்கள். வாய்க்காலில்
உள்ள மேடுபள்ளங்களை சரிசெய்து, இடையூறாக
உள்ள கல், தூசிகளை அகற்றி, தண்ணீர் வரும்
வழியை செம்மைப்படுத்துவார்கள்.

இதனால், தண்ணீர் வீணாகாமல் விரைவில் நிலத்துக்குள்
சென்றுசேரும். பயிர்களுக்கும் விரைவில் தண்ணீர் கிடைக்கும்.

Advertisement

மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, கால்வாயில்
இருந்து வேளாண் நிலத்துக்குள் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி,
முதலில் வாய்க்காலை மண்வெட்டி கொண்டு சரிசெய்வது
விவசாயிகளின் வழக்கம்.

விவசாயிகளின் அந்தச் செயலை அப்படியே செய்கிறது
செல்லப்பிராணி ஒன்று. செம்மண் நிலத்துக்குள் வரும்
தண்ணீரை முறையாக வழிந்தோடச்செய்யும் விதமாகத்
தனது கால்களால் வாய்க்கால் போல் அமைத்து சுறுசுறுப்பாக
வேலைசெய்கிறது.

நன்கு பயிற்சிபெற்ற விவசாயிபோல் செயல்படும்
செல்லப்பிராணியின் இந்த வீடியோக் காட்சியைப் பார்க்கும்
விவசாயிகள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துவிடுகின்றனர்.