https://www.instagram.com/reel/CVoZk3YD4y8/?utm_source=ig_web_copy_link
சிங்கம்போலத் தோற்றம்கொண்ட நாயின் வீடியோ இணையதளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது,
அந்த வீடியோக் காட்சியின்படி, மிகப்பெரிய பூங்கா ஒன்றில் மக்கள் அமர்ந்து பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு வேடிக்கை காட்டுவதுபோல சிங்கம் உருவமுள்ள நாய் ஒன்று உலா வந்தது. பூங்காவிலிருந்தவர்கள் அதைப் பார்த்துத் திகைப்பில் ஆழ்ந்தனர்.
மெல்லிய தேகத்தைக்கொண்ட அந்த செல்லப்பிராணியின் கழுத்தைச்சுற்றி அடர்த்தியாக நீண்டு வளர்ந்துள்ள ரோமங்களும், நடந்துவரும் அழகும் சிங்கத்தைப்போலக் கம்பீரமான உருவமாகக் காண்பித்தன.
ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் செல்லப்பிராணியை இப்படி அலங்கரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கத்தைப்போல அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த செல்லப்பிராணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.