Saturday, May 10, 2025

டாலருக்கு பேரழிவு தொடங்கியது! அடித்து நொறுக்கும் சீனா! மெல்லச் சாகிறதா ?

உலகம் முழுக்க நாணயங்களை ஆட்சி செய்த அமெரிக்க டாலர், இப்போது மெதுவாக அதன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியுள்ளது. பிரபல முதலீட்டு நிறுவனம் யூரிசான் கேப்பிட்டலின் தகவல்படி, டாலரின் மதிப்பு குறைய தொடங்கியதற்குக் காரணம் – சீனா, தைவான், மலேசியா, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகள் தான்.

2020ம் ஆண்டு வரை, இந்த நாடுகள் அமெரிக்க டாலரை பெரிய அளவில் சேமித்து வைத்திருந்தன. நேரடியாகவும், கடன் பத்திரங்களாகவும், டாலர் கையிருப்பில் பெருமளவில் இருந்தது. ஆனால் தற்போது, இவை அந்த டாலரை சந்தையில் விற்றுவிட ஆரம்பித்து விட்டன. ஒரே நேரத்தில், 2.5 டிரில்லியன் டாலர் சந்தையில் இறக்கப்பட்டிருப்பது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாங்க ஆள் இல்லாத சூழலில், டாலரின் மதிப்பு வேகமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. உலகளாவிய சந்தை கலங்கியுள்ளது. டாலரின் முக்கியத்துவம் என்னவென்றால் – இது ரிசர்வ் கரன்சி. அதாவது, அவசர நேரங்களில் அனைத்துத் தேவைப்படும் பொருட்களை வாங்க பயன்படும் நாணயம். அதனால்தான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக அளவில் டாலரை சேமித்து வைத்திருக்கும்.

இப்போது, அந்த டாலரே கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது… இருப்பினும், இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்க பொருளாதாரம் திவாலாகி விடும் என்பதே உலகின் பீதி.

சீனா, தைவான், மலேசியா, வியட்நாம் — வெறும் நான்கு நாடுகளே இப்படி நடந்து கொண்டதால் இவ்வளவு தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லா நாடுகளும் இப்படிச் செய்தால், அது ஒரு மாபெரும் சரிவாகவே அமையும். இந்த தாக்கத்தை கடந்த வாரம் தைவானில் கண்டோம் – அங்கு, அமெரிக்க டாலர் 9% வரை வீழ்ச்சி கண்டது. இது 2007க்குப் பிறகு நிகழும் மிகப்பெரிய வீழ்ச்சி.

இந்த டாலர் வீழ்ச்சி தொடர்ந்தால், உலகின் நிதி நிலைமை எவ்வாறு மாறும் என்பதைச் சற்றும் யோசித்துப் பாருங்கள்.

Latest news