மதுபானப் பார் ஒன்றில் வாடிக்கையாளரை பேய் மிரட்டிய வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
இங்கிலாந்தின் சுந்தர்லேண்ட் பகுதியில் 167 வருடப் பழமையான மதுபானப் பார் ஒன்று இயங்கிவருகிறது. சில மாதங்களுக்குமுன் அங்கு சென்ற மதுபானப் பிரியர் ஒருவர் மதுபானக் கவுண்டரில் சென்று தனக்குத் தேவையான மதுபானத்தை ஆர்டர் செய்தார். அப்போது கவுண்டர் அருகே பீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கிளாஸ் திடீரென்று தானாகவே கீழே விழுந்து சிந்தியது.
அதேசமயம், அந்த வாடிக்கையாளரைத் தவிர, பீர்க் குவளை அருகே யாரும் இல்லை. இருந்தும் எப்படிக் கீழே விழுந்தது என்பதைக் குறித்துத் திகைப்பில் ஆழ்ந்தார் அந்த வாடிக்கையாளர்.
உடனடியாகப் பார் பணியாளர்களிடம் அந்த மதுபானப் பிரியர் கேட்டபோது, இதுபோன்று இதற்குமுன்பு பலமுறை நிகழ்ந்துள்ளதாகவும், இந்தப் பாரில் பேய்கள் உலவுவதாக வதந்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிசிடிவியில் பதிவான இந்தக் காட்சியைப் பாரின் வீட்டு உரிமையாளர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதும் வைரலாகியது.
வீட்டுப் பேய்த் தொல்லை தாங்கமுடியாமல் பாருக்குப் போனால் அங்கேயும் பேய்த் தொல்லையா என்று வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர் வலைத்தளவாசிகள்.