தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் கடந்த மாதம் 4ஆம் தேதி SIR பணிகள் தொடங்கியது. தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
தொடா்ந்து, 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 11ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதைதொடர்ந்து, தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
