இன்றைய காலத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன்கள் மூலம் நாம் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கிறோம். ஆனால் பலரும் ஒரு சிறிய தவறைச் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் தங்கள் பணத்தை தங்களது மொபைல் கவரில் வைத்திருப்பது.
பெரும்பாலானோர் தங்கள் பணத்தை தங்களது மொபைல் கவரில் வைத்திருப்பதே பார்த்திருப்போம். இது சாதாரணமாக தெரியலாம், ஆனால் மிகப் பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும் அணுகுமுறை. சமீப காலத்தில் பல மொபைல் போன்கள் வெடித்து அல்லது தீப்பிடித்து செய்தி தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு காரணமாக கவனக்குறைவு மற்றும் தவறான பழக்கங்கள் கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டுகளில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தொலைபேசியில் உருவாகும் வெப்பத்தை வெளியேற அனுமதிக்காது. அத்தகைய சூழ்நிலையில், வெப்பம் தொலைபேசியின் உள்ளே சிக்கி வெடிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டதால் அதை பயன்படுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.