AI தொழில்நுட்ப வளர்ச்சியினால் பிரபல வர்த்தக மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலங்களில்உள்ள சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்களில் சுமார் 10% ஊழியர்கள் இதன் மூலமாக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த பணிநீக்க நடவடிக்கையின் பகுதியாக, இந்தியாவில் இருந்து 800 முதல் 1,000 பேர் வேலை இழக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு 90 நாள்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
