Saturday, March 15, 2025

திருமண விழாவில் சோகம் : நடனமாடிய பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு

மத்தியபிரதேசத்தில், 23 வயது இளம் பெண் ஒருவர், தன் சகோதரியின் திருமண விழா மேடையில் நடனமாடும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இத்தகைய மரணம் பெண்ணின் குடும்பத்தில் முதல் முறை இல்லை எனவும், பெண்ணின் இரட்டை சகோதரர்கள் தங்களின் 12 வயதில் இதேபோல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.

Latest news