பெண்ணைக் கட்டித் தழுவிய முதலை

284
Advertisement

https://www.instagram.com/reel/CWGV1cppBIW/?utm_source=ig_web_copy_link

பெண்ணை நட்புடன் கட்டித் தழுவிய முதலையின் வீடியோ இணையதளவாசிகளை வாய் பிளக்கச் செய்துள்ளது.

கலிபோர்னியாவில் ஊர்வனவற்றுக்காக உயிரியியல் பூங்கா ஒன்று உள்ளது. அதன் பராமரிப்பாளராக இளம்பெண் ஒருத்தி உள்ளார். அந்த உயிரியியல் பூங்காவில் டார்த் கேட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய முதலையை அந்த இளம்பெண் தனது வாழ்நாள் தோழியாகக் கருதுகிறார்.

அதனால், டார்த் கேட்டரை அவ்வப்போது அவர் கட்டித் தழுவி பாசத்தை வெளிப்படுத்துவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பாசத்தோடு அரவணைத்துத் தழுவியுள்ளார். அப்போது அவர்மீது டார்த் கேட்டர் சிறுநீர் கழித்துள்ளது.

இதுபற்றிக் கூறியுள்ள அந்த இளம்பெண், எனது வாழ்நாள் தோழியான டார்த் கேட்டரைப் பார்க்கச் சென்றபோது அங்கு இல்லை. பிறகு, சிறிதுநேரம் கழித்து வெளியே வந்தது. உடனே எப்போதும்போலக் கட்டித் தழுவினேன். அந்த நேரத்தில் என்மீது என் தோழி சிறுநீர் கழித்துவிட்டாள் என்று வெட்கத்தோடு கூறியுள்ளார்.

முதலையும் இளம்பெண்ணும் நட்புடன் இருப்பதும் ஒருவரையொருவர் கட்டித் தழுவுவதும்…
நல்ல நட்பா…..ஆபத்தான நட்பா … சொல்லுங்க புரோ…