பெண்ணின் காதுக்குள் புகுந்த நண்டு

232
Advertisement

ஒரு பெண்ணின் காதுக்குள் நண்டு புகுந்த
சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில்
வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சான் ஜுவான் நகரைச் சேர்ந்த
ஒரு நீச்சல் வீராங்கனை. கரீபியன் தீவுகளில் ஒன்றான
புவர்ட்டோ ரிக்கோவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நீருக்குள் மூழ்கியபடி வேகமாக நீந்தத் தொடங்கினார்.

பயிற்சி முடித்து வெளியே வந்ததும் காது வலியால் அவதிப்படத்
தொடங்கினார். காதுக்குள் தண்ணீர் புகுந்திருக்கும் என்று கருதி
நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். என்றாலும்,
அது பலன் தரவில்லை. காது வலி அதிகரிக்கத் தொடங்கியது.

அதனால் மருத்துவரிடம் சென்று காண்பித்தார். அவரது
காதுகளைப் பரிசோதித்த டாக்டர் காதுக்குள் ஏதோவொன்று
அசைந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே நீச்சல்
வீராங்கனையின் காதுக்குள் இடுக்கியை நுழைத்து
உட்புகுந்திருந்த பூச்சியை வெளியே இழுத்தார்.

அந்தப் பூச்சி துள்ளிக்குதித்து கீழே விழுந்தபோதுதான்
தெரிந்தது அது நண்டு என்று. அதன்பிறகு வலி நீங்கி நிம்மதி
அடைந்தார்.

நீச்சல் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், காதுக்குள்
நண்டுபுகுந்ததை அவர் உணரவில்லைபோலும். அதனால் நீச்சல்
பயிற்சியில் ஈடுபடுவோர் காது சொருகிகளை அணிந்துகொள்ளுமாறு
அறிவுறுத்தியுள்ளார்.