இளம்பெண்ணுடன் ஓடிய குடும்பஸ்தருக்கு
நீதிமன்றம் நூதன தண்டனை

308
Advertisement

காதலியான இளம்பெண்ணுடன் ஓடிவிட்ட
குடும்பஸ்தருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை
வழங்கியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்
ராஹபாய் பர்மர். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.
மனைவியும் அவரோடுதான் இருக்கிறார். இந்த
நிலையில் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 20 வயது
இளம்பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, மே மாதத்தில் இளம்
பெண்ணைக் கூட்டிக்கொண்டு எங்கோ சென்று
விட்டார். அதையறிந்த அந்த இளம்பெண்ணின்
தந்தை தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு
உயர்நீதிமன்றத்தை நாடினார்.

உயர்நீதிமன்றமும் காணாமல்போன பெண்ணைக்
கண்டுபிடித்துத்தர காவல்துறைக்கு உத்தரவிட்டது.

காவல்துறையும் 7 மாதங்களாகத் தேடி அந்த
ஜோடியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில்
ஒப்படைத்தது. அந்த இளம்பெண் அவளது
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

அதேசமயம், ராஹபாய் பர்மருக்கு ஏற்கெனவே
திருமணமாகிவிட்டது தெரியவந்ததும் அவருக்குப்
புதுமையான தண்டனை வழங்க முடிவுசெய்தது-
என்ன தண்டனை தெரியுமா?

காணாமல்போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக
7 மாதங்களாகத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த
காவல்துறையினர் 17 ஆயிரத்து 710 மணி நேரம்
செலவிட்டனர். மேலும், இதற்காக மொத்தம்
1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் செலவானது.
இந்தத் தொகையில் பாதித் தொகையை அதாவது,
ரவுண்ட் ஆஃப் செய்து 55 ஆயிரம் ரூபாயை உயர்நீதி
மன்றப் பதிவேட்டிற்கு செலுத்தும்படி உத்தரவிட்டது.
தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும்
உத்தரவிட்டது.

ராஹபாய் பர்மர் அந்தப் பணத்தை நீதிமன்றத்தில்
செலுத்தியுவுடன் அந்தத் தொகை ராஜ்கோட் நகரக்
காவல்துறை நலநிதியில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூக ஊடகங்களில்
தற்போது வைரலாகிவருகிறது-