https://www.instagram.com/p/CUzi_p2Liv5/?utm_source=ig_web_copy_link
கருவிலுள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள புலியைப் பயன்படுத்திய தம்பதியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் அந்த தம்பதி துபாயில் வசித்துவருகின்றனர்.
கருவுற்றுள்ள அந்தப் பெண், தனது கர்ப்பத்திலுள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ளும்பொருட்டு துபாயில் உள்ள புல் அர்ஜ் அரபு ஹோட்டலுக்கு அருகேயுள்ள கடற்கரையில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளை நிறப் பலூன், கருப்பு நிற பலூன் இரண்டிலும் வண்ணப்பொடியை நிரப்பி காற்றில் பறக்கவிட்டுள்ளனர். அந்தக் கடற்கரையில் சுதந்திரமாக உலவி வரும் புலி ஒன்று அந்தப் பலூன்களைத் தனது கால்களால் தொட முயல்கிறது.
வெண்ணிறப் பலூன்கள் உயரத்தில் பறக்க, கருப்பு நிறப் பலூனோ தாழ்வாகப் பறக்கிறது. இரண்டுமுறை முயன்றபிறகு புலி தாழ்வாகப் பறக்கும் கருப்பு நிறப் பலூனைத் தொடவும் அதன் நகங்கள் பட்டு பலூன் உடைகிறது. பலூனிலிருந்து பிங்க் நிறப் பொடி காற்றில் பறக்கிறது. இதனைக்கொண்டு கருவிலிருக்கும் சிசு பெண் குழந்தை என்கிற முடிவுக்கு அந்தத் தம்பதி வந்துள்ளனர்.
இந்தச் செயலை விலங்கின ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் வலைத்தளவாசிகளும்,”விலங்கு செல்லப்பிராணியும் அல்ல; இந்தச் செயல் பெருமைக்குரியதும் அல்ல” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மருத்துவ அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்த்தோங்கியுள்ள இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தம்பதியா?