தமிழக பா.ஜ.க.வினர் தமிழக அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பனையூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று தொடங்கிவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களின் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது : யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம். தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.