லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்தியாவில் பல கிளைகளைக் கொண்ட ‘யூனோ அக்வா கேர்’ என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுப்பு அளித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கிளைகளுக்கு அந்த நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.