கடந்த 6 நாள்களில் கூலி படம் செய்துள்ள வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த 6 நாள்களில் இப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related News

Latest News