Monday, December 23, 2024

ஊர் மக்களுக்கு கறி விருந்து : தாயின் 110 வது பிறந்த நாளை கொண்டாடிய பிள்ளைகள்..!!

தாயின் 110 வது பிறந்த நாளை, அவரது பிள்ளைகள் நான்காவது தலைமுறையினருடன் ஊர் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சந்திரன்- ராசாம்பாள் தம்பதியினர் 14 பிள்ளைகள் பெற்று வளர்த்த நிலையில், அவர்களில் 7 பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2011 ஆம் ஆண்டு சந்திரன் உடல்நலக்குறைவால் இறந்தார். அதன் பின்னர், மகனின் பராமரிப்பில் வசித்து வரும் ராசாம்பால் 110-வது வயதில் அடியெடுத்து வைத்தார்.

தாய் ராசாம்பாவின் 110 வது பிறந்தநாளை, அவரது மகன் ஞானசேகரன் உள்ளிட்ட 7 பிள்ளைகள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் கொள்ளு பேரப்பிள்ளைகள் கூடி, ஊர் திருவிழாவைப்போல கொண்டாடினர். ஊரையே அழைத்து கறி விருந்து அளித்து ராசாம்பாலின் 110-வது பிறந்தநாளை மிக விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Latest news