Tuesday, July 29, 2025

ரகசிய காதலனுடன் வாழ தடையாக இருந்த குழந்தை!!துடிக்க துடிக்க கொன்ற தாய்!! திடுக்கிடும் பின்னணி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவைல கடந்த 26 தேதி மதியம் தனது குழந்தை திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி தமிழரசி என்பவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணின் குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதித்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதா மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழரசியிடம் காவல்துறையினர் விசாரிக்கும் போது, குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததாகவும், அப்போது தான் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார். ஆனால், குழந்தை மரணமடைந்த தகவல் அவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், உயிரிழப்பில் பெரும் சந்தேகம் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழரசியின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் புகார் தெரிவிக்க விசாரணையை தீவிரபடுத்தியட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது.

கோவை, இருகூர் பகுதியில கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடம் இருந்து பிரிந்து தமிழரசி, தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டட வேலைக்கு சித்தளாக சென்று வந்துள்ளார்.

கட்டிட வேலையில வசந்த் என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையிலான நட்பு நாளடைவில அது தகாத உறவாக மாறியுள்ளதாகவும், கடந்த சில மாதங்களாக தமிழரசி வசந்த மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களின் உறவுக்கு குழந்தை அபர்ணாஶ்ரீ இடைஞ்சலாக இருந்துள்ளார். இதனால் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கடைசியில் தமிழரசியே அபர்ணாஶ்ரீயின் கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, உடல்நிலை சரியில்லாமல் நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை அபர்ணாஶ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் முதலில் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்தனர். குழந்தையை கொலை செய்துவிட்டு காதலன் வசந்துடன் தமிழரசி சேர்ந்து வாழ திட்டமிட்டதும் காவல்துறையின் தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வசந்திடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் இதே போன்ற விவகாரத்தில் தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அபிராமியை போலவே, கோவை சித்தாள் வேலை பார்க்கும் பெண், காதலுக்காக தன் பெற்ற குழந்தையைத் தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News