செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது மென்பொருள் மூலக்குறியீடுகளை பகிர வேண்டும் என புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி, பல மென்பொருள் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 83 பாதுகாப்பு தரநிலைகள் கொண்ட இந்த திட்டத்தில், முக்கிய மென்பொருள் புதுப்பிப்புகள் செய்யப்படும் போது, அரசுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது மென்பொருள் மூலக்குறியீடுகளை பகிர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணின் நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
