Thursday, January 15, 2026

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா கடந்த சனிக்கிழமை 3ஆம் தேதி நடைபெற்றது.

அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு “பின்னி மில்” மைதானத்தில் நடைபெற இருந்தது. ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் அதே இடத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

Related News

Latest News