Thursday, February 5, 2026

“லட்சுமி-லாரன்ஸ் காதல்” படத்திற்கு தடை போட்ட சென்சார் போர்டு

சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்க முடியாது என்று மத்திய தணிக்கை வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

லட்சுமி–லாரன்ஸ் காதல் என்ற திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தணிக்கை வாரியம் தனது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற காட்சிகள் சமூக அமைதியை பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவற்றை கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் அனுமதிக்க முடியாது என்றும் தணிக்கை வாரியம் வாதிட்டது.

மத்திய தணிக்கை வாரியத்தின் இந்த வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பான மேலான விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

Latest News