Saturday, December 14, 2024

விருந்தினர்களை மறித்த பூனை; தரதரவென்று இழுத்துவந்த நாய்…

வீட்டுவாசலில் படுத்துக்கொண்டு விருந்தினர்களை
விடமறுத்த பூனையைத் நாய் தரதரவென்று இழுத்துவரும்
விநோத சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

செல்லப்பிராணிகளுள் பூனையும் இன்றியமையாத
அங்கத்தினராக உள்ளது தெரிந்ததே. அதேசமயம் விரோதிகள்
எனினும் நாயும் பூனையும் சகோதர மனப்பான்மையுடன்
செயல்படும் வீடியோக்களையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது இந்த வீடியோ.

வீட்டுவாசலில் உறவினர்கள் நிற்க, அவர்களை உள்ளே விடாமல் தடுக்கும்விதமாக
அங்கேயே படுத்துக்கிடக்கிறது பூனை ஒன்று. இதனைக் கண்காணிப்புக்
கேமராவில் கண்ட வீட்டுப் பெண்மணி தாங்கள் வளர்த்துவரும்
மற்றொரு செல்லப்பிராணியான நாயிடம் உறவினர்களை
உள்ளே அழைத்து வரும்படிக் கூறுகிறார்.

அதைக்கேட்ட வீட்டுக்குள் படுத்துக்கிடக்கும் நாய்
எழுந்துசென்று வாசலில் படுத்துக்கிடக்கும் பூனையைக்
காதைப்பிடித்துத் தரதரவென வீட்டுக்குள் இழுத்துவருகிறது.

தெருவில் விளையாடும்போது சேட்டை செய்யும் குழந்தையைத்
தாய்க் காதைப் பிடித்துத் திருகித் தரதரவென்று வீட்டுக்குள்
இழுத்துவருவதுபோல அமைந்துள்ளது இந்த வீடியோ.

இந்த சம்பவத்தின்போது பூனை, நாயின் செயல்பாடுகள் சமத்தாக அமைந்துள்ளது.
மிகவும் ஜாலியான இந்த சம்பவம் நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.

Latest news
Related news