டெல்லி மோதிலால் மார்க் பகுதியில் 3.7 ஏக்கரில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் விற்பனை செய்யப்பட்டது. ஆயிரத்து 400 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஆயிரத்து 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்து மீது யாராவது உரிமை கோர இருந்தால் 7 நாட்களில் ஆவணங்களுடன் தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் வீடு விற்பனையில் முந்தைய அனைத்து சாதனைகளையும் இந்த விற்பனை முறியடித்துள்ளது.