Tuesday, August 26, 2025
HTML tutorial

நடுசாலையில் துள்ளல் ஆட்டம்போட்ட மணமக்கள்

https://www.instagram.com/reel/CTbRhn-ov3C/?utm_source=ig_web_copy_link

நடுசாலையில் துள்ளல் ஆட்டம் போட்ட மணமக்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இப்போதெல்லாம் திருமணம் நடந்த மேடையிலேயே மணமக்கள் நடனமாடுவது வழக்கமாகி வருகிறது. மணமக்கள் மட்டுமன்றி, அவர்களின் நண்பர்களும் தோழிகளும் நடனமாடுவதும் சம்பிரதாயமாகிவிட்டது. ஆனால், மணமக்களின் நடனம் இல்லாமல் வட இந்தியத் திருமணங்கள் முழுமை அடையாது.

அதிலும். சில திருமணங்களின்போது நடைபெறும் நடனங்கள் வேடிக்கையாக அமைந்து மாபெரும் திருவிழாபோல் கலகலப்பாக்கிவிடும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய இதுவொரு நல்ல தொடக்கமான நிகழ்வாக உள்ளது..

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் மணமகன் வடஇந்தியர்போலவும் மணப்பெண் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்போலவும் தோற்றம் கொண்டுள்ளனர். இவர்களின் நடனம் வலைத்தளவாசிகளை வசீகரித்தது.

அதில் மணமகன் நடனமாடுவதைப் பார்த்து மணமகளும் நடனமாடுகிறார். ஆனால், நடனத்தின்போது மணமகளின் அங்க அசைவுகள் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News