சிறுவனின் அபார ராப் டான்ஸ்

347
Advertisement

சிறுவனின் அபாரமான ராப் டான்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரன்வீர் சிங் நடித்த ‘கல்லி பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘அப்னா டைம் அயேகா’ பாடலுக்கு அருணாசலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன் ராப் நடனமாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திறமையுள்ளவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு சிறந்த களமாக அமைந்துள்ளது. எங்கோ இருக்கும் திறமையாளர்களைக் குன்றிலிட்ட விளக்காகப் பிரகாசிக்கச் செய்வது சமூக வலைத்தளங்கள் எனில், மிகையல்ல.

அந்த வகையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவனின் அபாரத் திறமை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.

சிறுவனின் ராப் நடனத்தைக் கண்டுகளித்து உங்கள் கருத்தைப் பதிவிடுவதோடு, உங்கள் குழந்தைகளின் திறமையையும் கண்டறிந்து வெளிப்படுத்த வழிகாட்டுங்களேன்….