பெண்ணின் தலையில் கூடுகட்டிய பறவை

210
Advertisement

இருவருக்கும் நட்பாம்

நட்பின் காரணமாக தன் தலையில் பறவை கூடுகட்ட
அனுமதித்துள்ளார் ஒரு பெண்.

லண்டனைப் பூர்வீகமாகக்கொண்ட ஹன்னா போர்ன்
டெய்லர் என்ற பெண் போட்டோகிராபர் கானா நாட்டில்
வசித்துவருகிறார்.

அவர் தங்கியிருக்கும் பகுதியில் ஒரு நாள் பலத்த காற்றுடன்
மழையும் பெய்யத் தொடங்கியது. இதில் அவர் தங்கியிருக்கும்
வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்த பறவைக்கூடு கலைந்தது.
அப்போது கூட்டிலிருந்த பறவைகள் பறந்துசென்றுவிட, ஒரேயொரு
பறவைக் குஞ்சு மட்டும் கீழே விழுந்தது.

மீண்டும் எழுந்து பறக்க இயலாத அந்தப் பறவைக் குஞ்சைப்
பார்த்து ஹன்னா தவித்துப்போனார்.

அதை எடுத்துவந்து தனது வீட்டில் ஒரு அட்டைப்பெட்டிக்குள்
வைத்து அதனைப் பாதுகாக்கத் தொடங்கினார். அப்போது
அந்தப் பறவைக் குஞ்சால் சரிவரக் கண்விழித்துப் பார்க்கவோ,
நடக்கவோ முடியாமல் இருந்தது.

அதனை எப்படிப் பராமரிப்பது என்று இரவு முழுவதும்
யோசித்தார். பின்னர், வனவிலங்கு நிபுணர்களிடம் ஆலோசனை
பெற்றார். அவர்கள் பறவையின் சிறகுகள் முளைத்துப் பறக்கத்
தொடங்கக் குறைந்தது 12 வாரங்கள் ஆகும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது தலையிலேயே பறவைக் குஞ்சு கூடு
கட்டிக்கொள்ள வழிசெய்தார். ஹன்னாவின் தலையில் கூடு
கட்டிய பறவைக் குஞ்சும் அந்தப் புதிய கூட்டில் தங்கத் தொடங்கியது.

84 நாட்கள் அந்தப் புதிய கூட்டில் வசித்த பறவைக்குஞ்சுக்கு
சிறகுகள் நன்கு வளர்ந்து பறக்கும் அளவுக்கு வந்துவிட்டது.
வலிமைபெற்ற அந்தப் பறவை பறந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.

1976 ஆம் ஆண்டு வெளியான மதன மாளிகை படத்தில்
இடம்பெற்றுள்ள ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி
வானில் பறக்கிறது என்கிற சினிமாப் பாடல் வரிகள்தான்
நினைவுக்கு வருகிறது.