விமானமாக மாறிய ஆட்டோ., ஒரே வேலை அதுவா இருக்குமோ??

கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையே மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் தனது ஆட்டோவை இண்டிகோ விமானம் போல் மாற்றி உள்ளார். அவரது ஆட்டோ பலரின் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக்கொடுத்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியும் வைரலானது. இருந்தாலும், இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News