குழந்தையின் அழுகையை நிறுத்திய ‘அரபிக் குத்து’ பாடல்

153
Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தற்போது விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி செம்ம வைரலானது. இந்நிலையில் பலர் இந்த வீடியோவிற்கு டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் இந்த பாடலை கேட்டு பச்சை குழந்தை ஒன்று அழுகையை நிறுத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கை குழந்தை ஒன்றை பெண் ஒருவர் கையில் வைத்திருக்கிறார். அந்த குழந்தை அழுது கொண்டிருக்கிறது. அந்த குழந்தைக்கு பக்கவாட்டில் டிவி ஒன்று இருக்கிறது. டிவியில் பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் ப்ளே ஆக துவங்குகிறது. இந்த டிவிலிருந்து வரும் பாட்டு சத்தத்தை கேட்டு அழுது கொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்தி தன் கழுத்தை திருப்பி டிவியை பார்க்கிறது.பின்னர் அந்த பாடல் பாதியில் நிறுத்தப்படுகிறது. பாடல் நின்றதும் குழந்தை மீண்டும் அழ துவங்கிவிடுகிறது. பாடல் மீண்டும் ஒலிக்க வைக்கப்பட்டதும் குழந்தை அழுகையை நிறுத்தி டிவி பார்க்க துவங்கிவிடுகிறது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து குழந்தையை அழுகையை நிறுத்திய விஜயின் அரபிக் குத்து பாடல் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement