Thursday, May 8, 2025

அவ்ளோதான் ‘முடிச்சுட்டீங்க’ போங்க ‘Play Off’ கனவில் விழுந்தது இடி

தொடர்ந்து 5 போட்டிகளை வென்ற மும்பையின் சோலியை, குஜராத் மொத்தமாக முடித்து விட்டுள்ளது. மே 6ம் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சுப்மன் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.

Play Off வாய்ப்பினை உறுதி செய்யும் போட்டி என்பதால், இரண்டு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமான ஒன்றாக மாறியது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை, சொந்த மைதானத்திலேயே அநியாயத்திற்கு சொதப்பி விட்டது.

அந்த அணியில் வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், கார்பின் போஷ் தவிர்த்து, யாருமே இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் MI 155 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து சேஸிங் செய்த குஜராத் ஆரம்பத்தில் திணறினாலும் கில், பட்லர், ரூதர்போர்டு மற்றும் ஜெரால்டு காட்ஸி பங்களிப்பால் மும்பையை தோற்கடித்தது.

போட்டிக்கு நடுவே மழை அழையா விருந்தாளியாக அவ்வப்போது குறுக்கிட்டதால், DLS விதியை நடுவர்கள் எடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் குஜராத் வெற்றியை ருசித்து, டேபிள் டாப்பராக கெத்து காட்டுகிறது. மறுபுறம் இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸின் Play Off கனவில், மொத்தமாக மண் விழுந்துள்ளது.

மும்பை அடுத்ததாக பஞ்சாப், டெல்லி அணிகளை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளையும் வென்றால் MI Play Off செல்லலாம். இல்லையெனில் கையை கட்டிக்கொண்டு, பிற அணிகள் Play Offல் விளையாடுவதை வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

Latest news