திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா சிலை அருகே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர் : திமுக கூட்டணி வலுவான கூட்டணி இந்த கூட்டணியை பிரிக்க எந்த சூழ்ச்சி வந்தாலும் நடக்காது. யார் எந்த கூட்டணியில் வந்தாலும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம். பெண்களுக்கு என்று அதிக திட்டங்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு உருவாக்கிக் கொடுத்தவர் தமிழக முதல்வர்.
மதுரைக்கு எய்ம்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு திட்டம் அறிவித்தது ஆனால் கட்டிடம் கட்டுவதற்கு நிதி இல்லை என்று கூறுகின்றனர். அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது இன்னும் கிடப்பிலேயே உள்ளது.
தமிழ் மொழி சிறந்த மொழி என்று கூறும் பாரதப் பிரதமர் மோடி எழுத்து வடிவமே இல்லாத சமஸ்கிருதத்தில் மொழி வளர்ச்சிக்கு 200 கோடி நிதி ஒதுக்கும் மோடி தமிழ் மொழிக்கு 20 கோடி நிதி ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன கூப்பாடு போட்டாலும் பாஜக தமிழகத்தில் வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது. 10%, 8% ஓட்டு வேண்டுமானால் வாங்கலாம். வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை பாஜகவை மக்கள் வெறுத்து விட்டார்கள் என பேசினார்.