2023க்கு விஜய் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

220
Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ள விஜய், வருடத்திற்கு ஒரு படத்தையாவது கட்டாயம் ரிலீஸ் செய்வதை வாடிக்கையாக மாற்றி பல வருடங்கள் ஆகி விட்டன.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பீஸ்ட்’ படம் வெளியாக, தீபாவளிக்கு ‘வாரிசு’ வெளியாகும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ‘வாரிசு’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு உறுதியாகியுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு ‘தளபதி 67’ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், ஐந்து வருடங்களுக்கு பிறகு ஒரே வருடத்தில் இரண்டு விஜய் படங்கள் வெளியாகும். கடைசியாக, 2017ஆம் ஆண்டு விஜயின் ‘மெர்சல்’ மற்றும் ‘பைரவா’ வெளியாகியது.

2011ஆம் ஆண்டு ‘காவலன்’ மற்றும் ‘வேலாயுதம்’ வெளியாக 2012ஆம் ஆண்டு ‘நண்பன்’ மற்றும் ‘துப்பாக்கி’ படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதே போல 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்லா’ மற்றும் ‘கத்தி’ படமும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.

இவ்வாறாக ஒரு வருடத்தில் இரண்டு படங்கள் என்ற formula இது வரையில் விஜய்க்கு வெற்றிகரமாக அமைந்து வருவதால், அடுத்த வருடத்தில் அந்த ட்ரென்ட் மீண்டும் உயிர்ப்பு பெரும் பட்சத்தில் விஜயின் career புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.