‘வாரிசு’ லுக்கில் ‘JD’ கெட்டப்பில் மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய்!

அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்த ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்கள் மற்றும் ‘தளபதி 67’ அப்டேட் என தொடர்ந்து சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறார் விஜய்.

இந்நிலையில், மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.வி.முரளிதரன் அவர்கள் மகனின்,  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவிற்கு விஜய் வாரிசு லுக்கில் வந்ததோடு ‘மாஸ்டர்’ படத்தில் JD character அணிந்திருந்த காப்பை போட்டு வந்திருந்தார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானதையடுத்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதை தொடர்புபடுத்தி JD is back  என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News