அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் நம் நாட்டில் பாதிக்கப்படும் முக்கிய துறைகளில் ஒன்று ஜவுளி. இது நம் நாட்டு நிறுவனங்களில் வருவாதைய பாதிப்பதோடு, வேலையிழப்பையும் ஏற்படுத்துகிறது.
வெளிநாடுகளுக்கு அதிக ஜவுளி ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடம் பிடித்தது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியான ஜவுளிகள் ஏற்றுமதியானது. குறிப்பாக கடந்த 2024-25 நிதியாண்டில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு 10.94 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதியானது.
இந்நிலையில் தான் ஜவுளி துறையை ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவால் ஏற்படும் ஏற்றுமதியை இழப்பை சரிகட்ட 40 நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, பெல்ஜியம், துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மிகவும் முக்கியமானவையாகும். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் ஜவுளிகள் 40 நாடுகளுக்கும் கூடுதலாக ஏற்றுமதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.