சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி எலான் மஸ்க்கை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது. இதனால், இந்தியாவில் களமிறங்க எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது
இந்நிலையில், இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை மும்பையின் பாண்ட்ரா குர்லா வளாகத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திறக்கிறது. மொத்தம் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்திற்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகை செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.