லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்தமுறையும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக கூலி திரைப்படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.
படத்திற்கு முன்னதாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ், கூலி திரைப்படம் முதல் ஆயிரம் கோடி வசூல் செய்யப்போகும் தமிழ் படமாக இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோல லோகேஷ் கனகராஜை தமிழ்சினிமாவின் ராஜமவுலி என்று புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த், ராஜமவுலியின் திரைப்படங்களை போல லோகேஷின் அனைத்து திரைப்படங்களும் வெற்றிப்படங்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த சூழலில் கூலி திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்று வருவதால் இதைப்பார்த்த தெலுங்கு ரசிகர்கள் ராஜமவுலி என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங்கில் வைத்துவருகின்றனர். பல ரசிகர்கள் ‘ஒரே ஒரு ராஜமவுலி தான் என்றும், அவருடைய மேக்கிங்கிற்கு யாரும் இணையில்லை’ எனவும் பதிவிட்டு லோகேஷ் கனகராஜை விமர்சித்தும் வருகின்றனர்.