பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகாரப் பயணத்தை’ மேற்கொண்டார். இந்தப் பயணம் முடிவடைந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் பேரணி நடத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பீகார் பாஜக கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, “அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை; நாட்டில் உள்ள தாய்மார்களையும் சகோதரிகளையும் இழிவுபடுத்தியுள்ளனர்” என்று பேசியுள்ளார்.பிரதமர் மோடி பேசியதைக் கேட்ட பாஜகவினர் கண்கலங்கினர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளர். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:“ தாயார் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு வெளிநாடு சென்ற பிரதமர் மோடி சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவிற்கு திரும்பியதும் அவர் அழத்தொடங்கிவிட்டார்” என கூறியுள்ளார்.