Thursday, December 26, 2024

தன் காதலனின் தந்தையை திருமணம்  செய்த இளம்பெண்

தன்னை விட 24 வயது மூத்த தனது முன்னாள் காதலனின் தந்தையை 27 வயது பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட  சம்பவம்  அமெரிக்காவில் நடந்துள்ளது.

“சிட்னி”  இவர் தன் 11 ஆம் வயதிலிருந்து  பால் என்றவரின்  மகனை காதலித்து வந்துள்ளார்.வார இறுதி நாட்களில் அதிகநேரம் காதலன் வீட்டில்  நேரத்தை கழித்துள்ளார் சிட்னி.ஆனால் இவர்களின் காதல் தொடர்ந்து நீடிக்கவில்லை,பாலின் மகனுக்கு வேறொரு புதிய பெண்ணுடன் தொடர்பு எற்பட்டது.இதனால் சிட்னி தனியாக இருப்பதாக உணரத்தொடங்கினார்.

அச்சமயம்,தன் முன்னாள் காதலனின் தந்தையான பாலுடன் அதிகம் பேச தொடங்கினார்.இவர்கள் நெருக்கம் காதலாக மாறியது.முதலில் இவர்களின் காதலை சிட்னி தன் பெற்றோர்களிடம் கூறுகையில்,அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்,தங்கள் திருமணத்திற்கு பிறகு அவர்கள் பாலை மருமகனாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் சிட்னி.

இவர்களின் திருமணம் குறித்து சிட்னி கூறுகையில், வயதான ஒருவரை திருமணம் செய்துகொண்டதன் காரணமாக பல நண்பர்களை இழந்ததாகவும்  , வயது இடைவெளி உள்ள தம்பதிகள் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கவும் அக்கறை கொள்ளவும் முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புவதாக கூறியுள்ளார்.

Latest news