கேரளாவில் இருந்து கத்தாருக்கு 188 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம், புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அந்த விமானம் கோழிக்கோடுவிற்கு தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து 188 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீப காலமாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அச்சத்தையும் அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.